நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டும், நயனை கொஞ்சி கொஞ்சி பதிவிட்டும் விக்னேஷ் சிவன் நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்.
சமீபகாலமாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். சென்னையில் உள்ள கோவில்கள், திருப்பதி கோவில்களில் அவர்கள் வழிபட்ட புகைப்படங்கள் மற்றும் திருவாரூரில் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்த வீடியோ ஆகியவை வெளியானது.
வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை விக்னேஷ் சிவன் செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் ஆசையாக ஊட்டி விடும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘நயனுக்கு லோக்கல் உணவை ஊட்டி விடுவது மகிழ்ச்சி’ எனபதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Cd7jg87JW2h/?utm_source=ig_web_copy_link
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…