நயன்தாரா வந்ததும் என்னை மறந்துட்டான் - விக்னேஷ் சிவன் குறித்து நடிகை OPEN டாக்!

 
nayanthara vignesh shivan

நயன்தாரா: 

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் .

nayanthara

இரட்டை குழந்தைகளை பெற்ற நயன்தாரா தற்போது குடும்பமாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். மேலும், நட்சத்திர ஹீரோக்களோடு ஜோடி போட்டும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் .

சோனாவின் பேட்டி: 

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரபல கவர்ச்சி நடிகை சோனா... இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்தும் நயன்தாரா குறித்தும் பேசி இருக்கும் விஷயம் சமூகவலைதளவாசிகளை விழிபிதுங்க வைத்திருக்கிறது .

sona

ஆம், விக்னேஷ் சிவன் என்னோட ஆபிஸ்ல தான் கடந்த மூன்று வருடமாக வேலை செஞ்சுட்டு இருந்தாரு. எனக்கு நிறைய உதவியை செஞ்சிருக்காரு.சில விஷயத்தை நான் சொல்லிடுவேன். ஆனால் நயன்தாரா மேல் ரொம்ப மரியாதை இருக்கு.

நன்றி மறந்த விக்னேஷ் சிவன்: 

அதனால் சில விஷயங்கள் சொல்ல முடியாது. அவங்களும் என்ன மாதிரி நிறைய கஷ்டப்பட்டு இன்னைக்கு ஒரு குடும்பமா இருக்காங்க. அதுக்காக விக்னேஷ் சிவன் கெட்டவன் அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால், அவன் என்னை மறந்துட்டான் அப்படிங்கிறது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

nayan vikki


 
என்ன பண்றது வாழ்க்கை அப்படியே டோட்டலா மாறிடுச்சு அவ்வளவுதான் என நடிகை சோனா வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியை பார்த்தாவது விக்னேஷ் சிவன் மீண்டும் சோனாவுடன் நட்பு உருவை தொடர்ந்தால் அது அவரின் மனசுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் உதவி செய்தவர்களின் நன்றியை எப்போதும் மறந்து விடக்கூடாது.

Tags

From Around the web