Categories: Cinema News latest news

திருப்பதியில் ரகசிய திருமணம்?…வைரலாகும் விக்னேஷ்சிவன்-நயன்தாரா செல்பி புகைப்படம்….

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ் மனதை அலைக்கழித்து வருகின்றனர். அவ்வப்போது நயனை கொஞ்சி கொஞ்சி பதிவுகளை போட்டு நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன். அதோடு, இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாரா ஒரு பேட்டியிலும் கூறியிருந்தார்.

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், சென்னை போய்ஸ்கார்டனில் 2 வீடுகளை வாங்கியுள்ள நயன்தாரா அங்கு குடியேறியவுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒருபக்கம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதேபோல், சமந்தாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், திடீரென திருப்பதி சென்ற விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்று கடவுளை வழிபட்டனர். அதோடு,அங்கு எடுக்கப்பட்டசெல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எனவே,இருவருக்கும் அங்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கொளுத்திப்போட்டனர். ஆனால், விரைவில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளதால் அப்படம் வெற்றிபெறவே சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கோவில் கோவிலாக சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா