தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலர் தினம், பிறந்த நாள் தினம், புத்தாண்டு என முக்கிய நாட்களில் ஜாலியாக வெளிநாட்டுக்கு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்களை விக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்கி வெளியிட்டு 90 கிட்ஸ்களை உசுப்பேற்றி வருகிறார். அதிலும், இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் பலருக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கூட இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு ஜாலி பயணம் செய்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்களை விக்கி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்பெயினில் நடு ரோட்டில் கையோடு கை கோர்த்து ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…