இரவு 2 மணிக்கு நயனின் மைண்ட்செட் இப்படிதான் இருக்கும்- விக்னேஷ் சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்போது உயிர், உலக் என இரண்டு அழகிய ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோராய் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சினிமா, தயாரிப்பு, பிசினஸ் என இருவரும் பிஸியாகச் சுழன்று கொண்டிருந்தாலும், தங்களுக்கான பிரத்யேக நேரத்தை ஒதுக்க இவர்கள் தவறுவதில்லை.
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன் கூறுகையில், நாங்கள் இருவரும் இரவில் ஏதாவது படம் பார்த்துக் கொண்டிருப்போம், அப்போது நள்ளிரவில் திடீரென ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என்று தோன்றும். இல்லை என்றால் எதையாவது சாப்பிடலாமா என்று தோன்றும். இரவு இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு, வா எங்கேயாவது போயிட்டு சாப்பிட்டு வரலாம் என்று நான் கூப்பிட்டால், நயன் வேறு எதுவும் சொல்லாமல் சரி வா என்று சொல்லி அமைதியாக என்னுடன் கிளம்பி வந்து விடுவார். அவரது மைண்ட்செட் நள்ளிரவில் அப்படித்தான் மிகவும் இயல்பாக இருக்கும் என்று கூறினார்.
எங்களுக்கு பிலால் ஹோட்டலில் கிடைக்கும் பன் மிகவும் பிடிக்கும். நள்ளிரவில் அங்கு போனால் அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஒரு மெசேஜ் போட்டால் போதும், நாங்கள் வெளியே கூட வர வேண்டாம், அவரே எங்கள் காருக்கே வந்து பன்னை கொடுத்து விட்டுச் செல்வான் என கூறினார்.
