Categories: Cinema News latest news

Nayanthara: நயன்தாரா மேல காதலை விட அதுதான் அதிகமாம்… விக்னேஷ் சிவன் சொல்ற அந்த வார்த்தை தான் கவிதை!

தமிழ்த்திரை உலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண ஆவணப்படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

நானும் ரௌடி தான்

Nanum rowdy than

இவர்களது திருமண ஆவணப்படத்துக்கு கடந்த சில நாள்களாக பெரிய பிரச்சனை… தனுஷ் 3 வினாடி பாடல் காட்சிக்காக 10 கோடி கேட்கிறார் என்றும் பூதாகரமாக சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு ஒரு நியாயம் சொன்னாங்க. குறிப்பாக நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாரா தோன்றும் ஒரு பாடல் காட்சியில் 3 வினாடிகளைத் திருமண ஆவணப்படத்தில் வைத்துள்ளார்கள்.

10 கோடி

Also read: எங்க வந்து என்ன கேள்விக் கேட்குற…. டாக்டர் பட்டம் வாங்கின அர்ஜூன் பேசுறதைப் பாருங்க…!

அது தன்னிடம் அனுமதி பெறாமல் வைக்க முடியாது. அதற்கு 10 கோடி கொடுக்க வேண்டும் என்றும் தனுஷ் கேட்டாராம். அதனால் வெகுண்டு எழுந்த நயன்தாரா 3 பக்கத்திற்கு அவரைப் பற்றி விமர்சனம் செய்து அறிக்கை விட்டிருந்தார். இதெல்லாம் இந்த ஆவணப்படத்துக்கான ஒரு புரோமோஷன் தான். மற்றபடி ஒன்றும் இல்லை என்றும் பேசப்பட்டது.

ஆவணப்படம்

கடைசியில் இன்று அந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளதாம். இதில் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அப்படி என்றால் பிரச்சனை மீண்டும் வெடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷோ தற்போது பாங்காக்கில் இட்லி கடை படப்பிடிப்பில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இன்று நயன்தாராவின் பிறந்தநாள். அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவைப் பற்றி சில வார்த்தைகளை கவிதை நடையில் வடித்துள்ளார். என்னன்னு பாருங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Also read: சாபம் கொடுக்குறீங்களே நீங்க என்ன கண்ணகியா?.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. நயனை விளாசிய பிரபலம்!..

‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிரே… உன் மீது நான் வைத்துள்ள காதலை விட மரியாதை பல மடங்கு அதிகம் என்றும் நீ கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி’ என்றும் இயக்குனரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நயன்தாராவை இப்படி வர்ணித்து வாழ்த்தியுள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v