×

நயன்தாராவிற்கு கொடுத்த முதல் கிப்ட்... ஷாக் கொடுத்த விக்னேஷ் சிவன் 

நயன்தாராவைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு கோபத்தை வெளிப்படுத்தாமல் நயன்தாரவைப் பற்றி அவர் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு ரசிகர்கள் அசந்து தான் போய்விட்டார்கள்.

 
dd0a949c-57db-4d4d-96e1-a08d6e088227

பிரபல இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ்சிவான், இணையத்தில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

போடா போடி திரைப்படம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பின் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

இவர் இயக்கத்தில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில், விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர்.

அதில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, குறிப்பாக நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன என்று கேட்ட போது, நான் அவருக்காக எழுதிய தங்கமே உன்னைத் தான் பாடல் என்று பதில் அளித்தார்.

அதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கும், என்று கேட்கப்பட்டதற்கு, அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும் என்றார்.

நயன்தாரா அழகின் ரகசியம் கொஞ்சம் சொல்லுங்களே என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் நயன்தாராவின் தொடர் பிரார்த்தனைகள் தான், அவரை இவ்வளவு அழகாக வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இப்படி அவர் நயன்தாராவைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு கோபத்தை வெளிப்படுத்தாமல் நயன்தாரவைப் பற்றி அவர் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு ரசிகர்கள் அசந்து தான் போய்விட்டார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News