×

தினமும் வீட்டில் பாத்திரம் கழுவும் நயன்தாரா... ரகசியத்தை சொன்ன சிவன்

ரகசிய புகைப்படம் ஒன்றை வெளியிடுமாறு ரசிகர் கேட்க, அதற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவுடன் எப்பொழுது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
 
afcd19b7-1ff8-405f-bc63-dbee8cf478ab

இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.

நயன்தாரா பற்றி அவரிடம் நிறைய கேள்வி கேட்டார்கள். ஒரு ரசிகரோ, உங்களையும், நயன்தாராவையும் பற்றி சில ரகசியங்களை சொல்லுங்களேன் என்று கேட்டார். ஆனால் விக்னேஷ் சிவனோ, நயன்தாராவின் ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.

அதாவது தினமும் இரவு சாப்பிட்ட பிறகு அனைத்து பாத்திரங்களையும் நயன் தான் கழுவி வைப்பார் என்கிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனின் பதிலை பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை தினமும் வீட்டில் பாத்திரம் கழுவுகிறாரா, தலைவி தலைவி தான் என்று ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டும் அல்ல ரகசிய புகைப்படம் ஒன்றை வெளியிடுமாறு ரசிகர் கேட்க, அதற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவுடன் எப்பொழுது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவனோ, திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கொரோனா போக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

விக்னேஷ் சிவனின் பதிலை பார்த்தவர்கள், சத்தியமா இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கவில்லை அன்பான இயக்குநரே என்கிறார்கள். நயன்தாராவை விரைவில் திருமதியாக பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள் ரசிகர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News