சீண்டி பாருங்க! ரியாக்‌ஷன் இனி இப்படித்தான் இருக்கும்.. வெளியான விக்கி-நயன் வீடியோ

by Rohini |
nayanthara
X

nayanthara

நயன்தாரா:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன் சமீபகாலமாக பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவரின் போக்கும் பல பேருக்கு பிடிக்காமல்தான் இருக்கிறது.தன் சுயநலத்திற்காக மற்றவர்களின் வேலைகளை தடுக்கிறார் என்பது போல் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த மாதிரி சமீப காலமாக நயன்தாரா பற்றிய பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அதுவும் திருமணத்திற்குப் பிறகு அவர் இந்த மாதிரி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி கொண்டே வந்தன. தன் குழந்தைகளை கவனிப்பதில் இருந்து படப்பிடிப்பில் தன்னுடன் வரும் உதவியாளர்களுக்கு செலவு செய்வது வரை அவருடைய டார்ச்சர் தாங்க முடியவில்லை என நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

வலைப்பேச்சு சேனல் மீது பழி:

சமீபத்தில் கூட வலைப்பேச்சு சேனலை டார்கெட் செய்து அவர் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி தீயாய் பரவியது. கிட்டத்தட்ட உருவ கேலி செய்வது போல வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்களை தாக்கி பேசி இருந்தார் நயன்தாரா. அதிலிருந்து வலைப்பேச்சு சேனலுக்கும் நயன்தாராவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமானது என்றே சொல்லலாம். இதுநாள் வரை நயன்தாராவை பற்றியும் விக்னேஷ் சிவனை பற்றியும் பிஸ்மி மற்றும் அந்தணன் தொடர்ந்து பேட்டிகளில் பேசி வருவதை நாம் பார்க்க முடிகிறது.

அந்த அளவுக்கு அவர் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் டார்ச்சர் செய்திருக்கிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம் என்ற வகையில் அந்தணன் மற்றும் பிஸ்மி இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்வது போல பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவை பதிவிட்டு இனிமேல் எங்களுடைய ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும். என்ன நடந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்பது போல ஒரு கேப்ஷனையும் பதிவிட்டு தங்களை விமர்சனம் செய்தவர்களுக்கு மறைமுகமாக பதில் கொடுத்த மாதிரி இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.


Next Story