×

அது மட்டும் நடந்துவிட்டால் நயன் கழுத்தில் தாலி கட்டிடுவேன் - விக்னேஷ் சிவன்!

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

 

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது  விக்னேஷ் சிவன் பிரபல இணையதள பேட்டி ஒன்றில் நயன்தாரா உடனான காதல் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு.

"தற்ப்போது நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து குறிக்கோள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றி வருகிறோம்.  அதனை அடைந்து முடித்த பிறகு தான் திருமணம். இதுபோக எங்களுக்குள் இப்போதைக்கு காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த லவ் போதுமென்கிற போது நாங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News