மீண்டும் பிறந்தாலும் நீதான் வேண்டும் தங்கமே!.. நயன்தாரா பிறந்தநாளில் கணவர் உருக்கம்!..

 
nayan

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதில், மீண்டும் பிறந்தாலும் நீதான் வேண்டும் என் உயிர் உலகமே என் தங்கமே உன்னை மிகவும் நேசிக்கிறேன் என அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இருவரும் இணைந்திருக்கும் அழகான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலகம் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். 

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிதும் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படத்திலும் நயன்தாரா இணைந்துள்ளார். 

திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நயன்தாராவுக்கு, கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இந்தப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

CR  Desk
CR Desk

7936 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web