திரை மீது தயிர் பாக்கெட்டை வீசிய ரசிகர் - வேதனையை கொட்டிய திரையரங்கு உரிமையாளர்

விஜய் நடிப்பில் கடைசி படமான ஜனநாயகன் நேற்று வெளியானது. பொதுவாகவே விஜய் படம் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்
 
jananayagan

விஜய் நடிப்பில் கடைசி படமான ஜனநாயகன் நேற்று வெளியானது. பொதுவாகவே விஜய் படம் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். அதிலும் ஜனநாயகன் கடைசி படம் என்பதாக் கேட்கவா வேண்டும்? தமிழகமெங்கும் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி விட்டார்கள். சில திரையரங்குகளில் ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறியும் நடப்பது வழக்கம். அந்தவகையில் இம்முறை சென்னை வித்யா திரையரங்கில் நடந்துள்ளது ஒரு சம்பவம்.

திரையரங்கில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்கீன் மீது தயிர் பாக்கெட்டை வீசியுள்ளனர். இது குறித்து தங்களது வேதனையை பகிர்ந்துள்ளார் திரையரங்கத்தினர். இது குறித்து அவர் தனது என்ஸ் பக்கத்தில், 

vidya theater

தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, அவர்களை முடிந்தவரை ஈர்க்கும் வகையில்தான் நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம். ஆனால், நேற்று இரவு சில சமூக விரோதிகள் எங்கள் திரை மீது தயிர் பாக்கெட்டை வீசியுள்ளனர். அந்த திரையை மாற்ற எங்களுக்கு லட்சக் கணக்கில் செலவாகும். இனி எங்கள் தியேட்டரில் மாஷ்அப்களுக்கோ கொண்டாட்டங்களுக்கோ அனுமதி இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

screen

From Around the web