தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா சினிமா உலகில் மிகவும் தேடப்படும் நடிகராக வளர்ந்து வருகிறார். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் ஹிந்தியில் இவர் நடித்து வெளியான லைகர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
படத்தின் பாடல்களும் செம ஹிட். இந்த நிலையில் ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கும் சாரா அலிகான் ஹிந்தி சேனலில் ஒளிபரப்பாகும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜான்வி கபூருடன் இணைந்து தன் சினிமா பற்றிய அனுபவங்களை பகிர்ந்தார்.
அப்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சாரா அலிகானிடம் நீங்கள் யாருடன் டேட்டிங் செய்ய ஆசை படுகிறீர்கள் என கேட்டார். அதற்கு விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் பண்ண தான் ஆசை என்று கூறினார். இந்த நிகழ்ச்சியை பார்த்து விஜய் தேவரகொண்டா உடனே சாரா அலிகானுக்கும் மெசேஸ் மூலம் தனது நன்றியை தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் லைகர் படத்தின் பிரஸ் மீட்டில் சாரா அலிகானின் டேட்டிங் செய்திக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் “ எனக்கு relationship என்ற வார்த்தையை கூட நன்றாக சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது என்னால் அதில் எப்படி இருக்க முடியும்” என்று கூறினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…