×

விஜய் 65- கை கழுவிய சன் பிச்சர்ஸ்: கொண்டாட்டத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாகாமல் உள்ளது. மக்களின் இயல்பு நிலைமை திரும்பியதும் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாகாமல் உள்ளது. மக்களின் இயல்பு நிலைமை திரும்பியதும் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் 65வது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாகவும்,தமன் இசையமைக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் விஜய் அடுத்தப்படம் தயாரிப்பிலிருந்து சன் பிச்சர்ஸ் விலகியுள்ளது.

காரணம் கொரோனா காரணமாக விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பு நிர்வாகம் தங்களது சம்பளத்தை குறைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்பு அதற்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகியது சன் பிச்சர்ஸ் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் 65 ப்ராஜெக்டை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. விஜய் 66வது படத்தை தயாரிப்பதாக இருந்த இந்த நிறுவனம் 65வது படத்தையும் தயாரிக்க உள்ளது. ஏற்கெனவே மெர்சல் படத்தை தயாரித்த அந்த நிறுவனம் வேறு படங்களை தயாரிப்பதிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News