Categories: Cinema News latest news

மொத்தமா தெலுங்கு பக்கம் போய்ட்டீங்களே விஜய்.! உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா.?!

விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட்  திரைப்படம் உருவாகி விட்டது. அந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி சன் பிக்ச்சர்ஸிடம் இருந்து அறிவிக்கப்படவில்லை.

இப்படத்தையடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பாளர் என்றவுடன் விஜய் தெலுங்கு பக்கம் போய் விட்டாரோ என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.

இதையும் படியுங்களேன் – தனுஷை என்னால் சமாளிக்க முடியல.! கதறும் இயக்குனர் செல்வராகவன்.!

ஆனால், இது முழுக்க முழுக்க தமிழ் திரைப்படமாக எடுக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகும் என தயாரிப்பு தரப்பிடம் இருந்து கூறப்பட்டது. முதலில் இப்படத்தின் செட் ஐதராபாத்தில் போடப்படுவதாக இருந்தது. பின்னர், விஜயின் தூண்டுதலால் இப்படத்தின் செட் சென்னையில் போடப்பட்டுள்ளது.

ஆனால், இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 2ஆம் தேதி ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. அன்றைய தேதியில் தான் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி நாளாகும். ஒரு தமிழ் படத்தின் ஷூட்டிங் தெலுங்கு வருட பிறப்பு என்று ஆரம்பிப்பதால் விஜய் முழுக்க முழுக்க தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் என்ற சந்தேகம் திரையுலகில் மத்தியில் மீண்டும் உருவாகி வருகிறது. எது எப்படியோ படம் நன்றாக வந்தால் சரி என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Manikandan
Published by
Manikandan