Categories: Cinema News latest news throwback stories

எங்க அப்பா சரியான மிலிட்ரி… அந்த ஒரு விஷயத்தை சரியா செஞ்சிருக்கணும்… தளபதி சொல்லும் சீக்ரெட்

Vijay: சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் இவ்வளவு தூரம் உயர்ந்து இருப்பதற்கு காரணம் என்னவோ அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான். இதுகுறித்து விஜய் பேசி இருக்கும் ஒரு பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

நடிப்பின் மீது ஆசை கொண்ட விஜய் தந்தையிடம் பல போராட்டங்களை நடத்தி ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் டயலாக்கை பேசிக்காட்டி அதன் பின்னே நடிகராக நடிக்க சம்மதம் வாங்கினார். பின்னர் விஜயை வைத்து ஏழு படங்கள் வரை எஸ் ஏ சி இயக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: மலையாள நடிகையை ஷூட்டிங்கில் அடித்த இயக்குனர் பாலா… என்னங்கையா இன்னுமா நீங்க மாறல?

ஆனால் ஒரு படம் கூட பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. பின்னர் தான் இயக்குவதை விடுத்து மற்ற இயக்குனர்களிடம் சென்று விஜயிற்காக வாய்ப்பு கேட்பாராம். அது மட்டுமல்லாமல் விஜய் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அவரின் போட்டி நடிகர்களை காலி செய்யவும் எஸ் ஏ சி பல விஷயங்கள் கையில் எடுத்திருந்தார் எனவும் பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் தற்போது விஜயும் எஸ் ஏ சந்திரசேகரும் ஒன்றாக இல்லை இருவருக்குள்ளும் பெரிய பனிப்போரே நடந்து வருகிறது என்ற தகவல் பலருக்கும் தெரிந்த கதை தான். ஆனால் பெரும்பாலான இடங்களில் விஜய் தன்னுடைய தந்தையை விட்டுக் கொடுத்ததில்லை என்பதற்கு ஒரு பழைய வீடியோ சான்றாகி இருக்கிறது.  அதில் பேசியிருக்கும் விஜய், எனக்கு ஷூட்டிங்கிற்கு காலை 6 மணிக்கு சொன்னால் 6: 05 க்கு செல்வதை கூட நான் தப்பாக தான் நினைப்பேன்.

இதையும் படிங்க: பாட்ஷாவில் போட்ட சபதத்தை பாபாவில் நிறைவேற்றிய பிரபலம்… அப்படி என்னதான் நடந்தது?

சரியாக அவர்கள் சொன்ன நேரத்தில் நான் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். அவர்கள் எத்தனை மணிக்கு படப்பிடிப்பை தொடங்கினாலும் அது என் கவலை இல்லை. இப்படி இருக்க எனக்கு சொல்லிக் கொடுத்தது என் தந்தை தான். அவர் ஒரு மிலிட்டரி மேன் போன்றவர். ரொம்பவே கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். அதனால் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் அங்கு நான் இருக்க வேண்டும்.

அதில் சில நிமிடங்கள் மாற்றம் கூட இருக்கக் கூடாது என்பதில் நான் இன்றளவும் கவனமாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். சமீபத்திய அரசியல் குறித்த அறிக்கையில் கூட தன்னுடைய தாய், தந்தை குறித்தும் குறிப்பிட்டு இருப்பார். அதுவே மகனாக இன்றளவும் விஜய் தன்னுடைய தந்தையை விட்டுக்கொடுக்கவே இல்லை என ரசிகர்கள் புகழாராம் சூட்டிவருகின்றனர்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily