Connect with us
dp-17

Cinema News

தரமான கதாபாத்திரத்தில் தளபதி: லீக்கானது விஜய் 66 கதை!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தன்று அஜித்தின் வலிமைப்படத்திற்கு போட்டியாக வெளிவரும் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

தளபதி 65 ரிலீசுக்கு முன்னரே நடிகர் விஜய் தனது அடுத்த படமான தளபதி 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் தளபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்து தீயாக பரவி வருகிறது.

அதாவது, இப்படத்தில் நடிகர் விஜய், வைல்ட் லைப் புகைப்பட கலைஞராக இருந்து பின்னர் ஒரு பத்திரிகையாளராக மாறி காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழிப்பதற்கு எதிராக பேசும்” கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். எனவே இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படைக்கும் என நம்ப முடிகிறது. கத்தி படத்தில் இதே போன்று தான் தண்ணீர் பிரச்சனை, தண்ணீர் சுரண்டல் குறித்து சமூக அக்கறையுடன் கருத்துக்களை கூறி மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top