மாஸ்டரில் அஜித்தை கலாய்த்த விஜய்...? தல செஞ்சது மட்டும் நியாயமா? எகிறும் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். நாயகிகளாக ஆண்ட்ரியா, மாளவிகா நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரமான வில்லனிற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த தீபாவளி தினத்தில் வர வேண்டிய படம் இந்த பொங்கலில் தான் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றது மாஸ்டர். இந்நிலையில், மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால், மீண்டும் மாஸ்டர் பேச்சுகள் தான் பல தரப்பிலும் அடிப்பட்டு வருகிறது. படத்தில் ஒரு காட்சியில் அஜித் குறித்த ஒரு நெகட்டிவ் செய்தி இடம் பெற்றது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் தளபதி குறித்து அவதூறான வகையில் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இது மட்டும் ஞாயமா???? #கிழட்டு_அஜித் pic.twitter.com/yZJC1qCoWK
— 𝚁𝙰𝚂𝙸𝙺𝙹𝙰𝙷𝙰𝙽🇱🇰 (@JAHANJA67285432) January 29, 2021
இவர்களுக்கு எதிராக தளபதி ரசிகர்களும் என்னை அறிந்தால் படத்தில் விஜய் குறித்த ஒரு நெகட்டிவ் செய்தி இடம் பெற்ற காட்சியை வெளியிட்டனர். என்னவோ எத்தனை வருஷம் ஆனாலும் இவங்க சண்டை ஓய மாட்டிங்குது பாஸ்!