தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். தற்போது இரண்டு பேரும் அவர்களின் புதிய படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கின்றனர். வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் இன்னும் பேர் வைக்காத புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடினர். எப்பொழும் பிறந்த நாளின் போது சூட்டிங் போக மாட்டார் விஜய் என நினைத்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் சூட்டிங் இல்லைன்னா அந்த தொடர்ச்சி கெட்டு போய்விடும் என கருதி அன்று சூட்டிங்கில் கலந்து கொண்டாராம் விஜய்.
அப்போது சரத்குமாரும் உடன் இருந்து படக்குழு சார்பாக பெரிய அளவில் கேக் தயார் செய்து கொண்டாடினார்களாம். அப்போது புகைப்படங்கள் எல்லாம் எடுக்க அந்த புகைப்படங்கள் எதுவும் இணையத்தில் வரவில்லை. வந்திருந்தால் கெட்டப் எல்லாம் தெரிந்து விடும் என கருதி வெளியிடவில்லையாம். மேலும் அவர் சூட்டிங்கில் இருந்த சமயத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் கேரவனுக்குள் போய் தோற்றத்தை எல்லாம் களைந்து விட்டு சாதாரணமாக வந்து போஸ் கொடுப்பாராம்.
இதே வழியை தான் அஜித்தும் பின்பற்றுகிறாராம். மேக்கப்பில் இருக்கும் போது வந்தவர்களை காத்திருக்க வைத்து விட்டு சூட்டிங் கெட்டப்-களை களைந்து விட்டு தான் போட்டோ எடுப்பாராம் அஜித். இந்த வகையில் அஜித்தும் விஜயும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள் என பேசிக் கொள்கிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…