×

விஜய் தூக்கி போட்டு நான் எப்படியாவது முந்தி விடுவேன்... அஜீத்தின் ரகசியத்தை போட்டுடைத்த நண்பர்

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் மிக பெரிய தூண்களாக இருந்து வருபவர்கள், இவர்கள் இந்தியளவில் அறிய படும் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.

 

இவர்களின் திரைப்படங்கள் எப்போதும் உலகளவில் எதிர்பார்க்கப்படும், அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக தயாராக உள்ளது, தல அஜித் வலிமை படத்தை முடிக்கும் பணியில் உள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சஞ்சீவ் இதுவரை பலரும் அறிந்திராத ரகசியத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

ஆம் 10 வருடத்திற்கும் முன் தல அஜித்தை சந்தித்த போது சஞ்சீவிடம் அவர் "எனது வாழ்க்கையில் ஒரே குறிக்கோள், உங்கள் நண்பர் விஜய்யை ஜெயிக்கனும், அவரை தூக்கி போட்டு நான் எப்படியாவது முந்தி விடுவேன் பாருங்கள்" என கூறினாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News