Categories: Cinema News latest news

நண்பரின் போனை உத்துபார்த்துக்கொண்டிருந்த விஜய்.! ஏன் எதற்காக? அஜித்தின் கதையே வேறு.!

திரைத்துறையில் பெரிய இடத்தில் இருக்கும் நடிகரோ அல்லது இயக்குநர்களோ, அல்லது அந்த இடத்தை பிடிக்க துடிக்கும் வளர்ந்து வரும் திரபிரபலமோ நீங்கள் யாருக்கு போன் போட்டாலும், அதில் பெரும்பாலானோர் நார்மல் போன் கால்களை அனுமதிப்பது இல்லையாம்.

மாறாக வாட்சப் கால்களை மட்டுமே அனுமதிக்கின்றனராம். காரணம் நார்மல் காலில் நாம் எதாவது பேச அதனை ரெகார்ட் செய்து வேண்டாத வேலைகலெல்லாம் சிலர் செய்துவிடுகின்றனராம். அதனால், ரெக்கார்ட் செய்ய முடியாத வாட்சப் கால்களை மட்டுமே விரும்புகின்றனராம்.

சமீபத்தில் நம்ம தளபதி விஜயை பார்க்க ஒரு நண்பர் சென்றுள்ளாராம். அப்போது பேச தொடங்கும் முன்னரே அவரிடம் எதுவும் ரெகார்ட் செய்யலையே என கேட்டு தர்மசங்கடப்படுத்தியுள்ளாரம் விஜய்.

பின்னர், பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில் அந்த நண்பரின் போனை அப்பப்போ பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இவரின் கதை இப்படி என்றால், அஜித்தின் கதை வேறு மாதிரி அவரை பார்க்க யார் சென்றாலும் அவருக்கு போன் கொண்டு செல்ல அனுமதி இல்லையாம்.

Manikandan
Published by
Manikandan