×

விஜய்யும் அல்லு அர்ஜூனும் ஒன்றாக ஆடணும்... ஆசைப்படும் பிரபலம்

நடிகர் விஜய்யும் அல்லு அர்ஜூனும் இணைந்து வெள்ளித்திரையில் டான்ஸ் பண்ண வேண்டும் என கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
 

தென்னிந்திய சினிமாவில் `தளபதி’ விஜய் மற்றும் `ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜூன் ஆகிய இருவரும் டான்ஸில் வல்லவர்கள். இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாக முக்கியக் காரணங்களுள் முதன்மையானது இவர்களது நடனத் திறமை. எந்த ஸ்டெப் கொடுத்தாலும் அசால்டாக ஆடி அசத்தி விடுவார்கள் இவர்கள் இருவரும். இது பெரும்பாலான கொரியோகிராபர்களின் ஸ்டேட்மெண்ட். 


இந்தநிலையில், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாட வேண்டும் என கிரிக்கெட்டர் அஷ்வின் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் அஷ்வின், `நடிகர் விஜய்யும் அல்லு அர்ஜூனும் இணைந்து நடனமாடினால், அது மிகப்பெரிய பென்ச் மார்க்காக இருக்கும்’ என தனது விருப்பத்தைப் பகிர்ந்திருக்கிறார் அஷ்வின். இருவரும் இணைந்து ஒரு படத்தில் ஆடுவார்களா என்பது சந்தேகமே. ஏதேனும் ஒரு சினிமா விழா போன்ற நிகழ்ச்சிகளில் இதற்கு சாத்தியம் அதிகம் என்று ரசிகர்கள் கமெண்டி வருகிறார்கள். 


xட்

From around the web

Trending Videos

Tamilnadu News