
Cinema News
விஜய், அர்ஜுன் ரெண்டு பேருமே மறுத்த கதை!.. ஏமாற்றமடைந்த இயக்குனர். அப்புறம் நடந்துதான் ட்விஸ்டு…
Published on
By
தமிழில் என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் கடந்து வந்த பாதையில் சிறப்பான சில திரைப்படங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் இழந்து இருப்பார்கள். அப்படியான நிகழ்வு நடிகர் விஜய் மற்றும் அர்ஜுனுக்கு நடந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தார். அவர் இயக்கிய ஜெண்டில் மேன் இந்தியன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. கமர்சியலான திரைப்படத்தை எடுக்கும் அதே சமயம் அந்த திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பல விஷயங்களை பேசக்கூடியவர் இயக்குனர் ஷங்கர்.
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் இயக்குனர் ஷங்கர். எனவே சந்திரசேகர் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தார். இந்த நிலையில் தனது மகன் விஜய்யை வைத்து இயக்குனர் ஷங்கர் ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். எனவே இது குறித்து ஷங்கரிடம் சென்று பேசினார்.
இருவருமே மறுத்த கதை:
அப்போதுதான் முதல்வன் திரைப்படத்திற்கான கதையை எழுதி இருந்தார் ஷங்கர். எனவே அந்த கதையை அவர் விஜய்யிடம் கூறினார். ஆனால் அரசியல் சார்ந்த அப்படி ஒரு படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு ஒரு ஐயம் இருந்தது. எனவே அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். அப்போதுதான் நடிகர் அர்ஜுன் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்தார்.
எனவே அவரிடம் சென்று முதல்வன் படத்தின் கதையை கூறினார் ஷங்கர் ஏனெனில் ஏற்கனவே ஷங்கரின் ஜெண்டில் மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் இப்படி ஒரு அரசியல் கதைகளம் அர்ஜுனுக்கும் ஐயத்தை ஏற்படுத்தியது ஏனெனில் ஏற்கனவே அவர் நடித்த ஜென்டில்மேன் ஒரு அரசியல் சார்ந்த திரைப்படமாக இருந்தது.
எனவே அர்ஜுனும் இதில் நடிக்க மறுத்துவிட்டார் அதன் பிறகு அர்ஜுன் நடித்தா இந்த படம் சரியான வெற்றியை கொடுக்கும் என்று பேசி புரிய வைத்த பிறகு அர்ஜுன் அந்த படத்திற்கு ஒப்புக்கொண்டார். இப்படி இந்த இரண்டு நடிகர்களுமே ஐயம் தெரிவித்த முதல்வன் திரைப்படம் பிறகு எதிர்பார்க்காத அளவு ஒரு வெற்றியை கொடுத்தது.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...