Connect with us
விஜய்

Cinema News

என்னம்மா இப்படி பண்றீங்களேமா..! தளபதி விஜயையே கொடுமைப்படுத்திய இளம் நடிகர்…

தளபதி விஜயுடன் நடிக்க பெரிய நடிகர்கள் துவங்கி இளம் நடிகர்கள் வரை ஆசைப்படுவார்கள். அப்படி இருக்கும் விஜயையே நடித்தே கொடுமை பண்ணிய ஒரு நடிகர் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவான படம் பகவதி. காதல் நாயகனாக வலம் வந்த விஜயை ஆக்‌ஷன் ஜானரில் நடிக்க வைத்து வெற்றி கண்டார் ஏ.வெங்கடேஷ். ரீமா சென், வடிவேலு, ஜெய் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவா இசையில் பாடல் அனைத்தும் டாப் ஹிட் ரகமாக அமைந்தது.

தளபதி

vijay jai

விஜயின் தம்பியாக ஜெய் இந்த படத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு முதல் படம் என்பதால் ரொம்பவே விளையாட்டுத்தனமாக இருந்தாராம். ஆக்‌ஷன் என்றவுடன் இயக்குனரிடம் என்ன ஆங்கிள் எனக் கேட்பாராம். கேமராவை பாருப்பா எனக் கூறியவுடன், அங்கு திரும்புவாராம். இப்படி பல சேட்டைகள் செய்து கொண்டே இருந்து இருக்கிறார்.

ஒருகட்டத்தில் விஜயிற்கே இந்த பையன் ரொம்ப சேட்டை செய்றான். மாத்தலாமோ என யோசனை தோணியதாம். இப்படியே இவர் சேட்டை செய்து கொண்டே இருக்க படமும் முடியும் தருவாய்கே வந்துவிட்டதாம். கடைசியாக ஷையோ ஷையோ பாடலை பிருந்தா மாஸ்டர் இயக்கினார்.

jai

அப்போது ஒரு காட்சியில் ஜெய்யினை இப்படி கிட்டாரை வைப்பா எனக் கூற அச்சு பிசுகாமல் அவர் சொன்ன மாதிரியே வைத்தாராம். உடனே பிருந்தா, ஜெய்யை சூப்பர் என பாராட்டினாராம். விஜயோ படமே முடியப்போகுது எனக் கலாய்த்துவிட்ட அங்கிருந்தவர்கள் செமையாக சிரித்துவிட்டனர். அதன்பிறகு அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டாலே சிரித்து விட்டு தான் செல்வார் என ஜெய் தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top