மீண்டும் அதிரடி காட்ட தயாராகும் பிச்சைக்காரன் வெற்றிப் பட கூட்டணி : ஜூன் 19-ல் வெளியாகும் நூறு சாமி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் நூறு சாமி  திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
nooru sami movie

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் நூறு சாமி  திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும்  பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தை அடுத்து விஜய் ஆண்டனியுடன் இயக்குநர் சசி கூட்டணி அமைத்து களம் இறங்குறார். 

nooru sami movie

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இத்திரைப்படம் வரும் ஜூன் 19-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில், உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் ஒரு ஒற்றைத் தாய் சந்திக்கும் சவால்களையும், அவளது உணர்வுப்பூர்வமான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இந்த எமோஷனல் டிராமா நகர்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ரிலீஸ் தேதியுடன் புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

nooru sami movie

தாயை மனுஷியாகப் பார்க்கும் படம் - இயக்குநர் சசி ஓபன் டாக்:

படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தாயை தெய்வமாக மதித்த திரைப்படம் பிச்சைக்காரன் . ஆனால், தாயை ஒரு சாதாரண மனுஷியாக, அவளது உணர்வுகளோடு பார்க்கத் தொடங்குவதுதான் இந்த 'நூறு சாமி'. ஒரு நகரத்து மனிதனாக இருந்தாலும், எனக்கு மண் மணம் மாறாத கிராமத்துக் கதைகளை இயக்குவது மிகவும் பிடிக்கும். அதில் இருக்கும் சவால்களும், கதை மாந்தர்களும் என்னை எப்போதும் ஈர்க்கும்  என்றார்.

மேலும் நடிகர் விஜய் ஆண்டனி குறித்துப் பேசுகையில்,  பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி ஒரு நடிகராக பல மடங்கு மெருகேறியுள்ளார். இதில் ஒரு அசலான கிராமத்து மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார். அதேபோல், நாயகி சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்புத் திறனும் தமிழ் சினிமாவில் வெகுகாலம் பேசப்படும். இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கிய நடிகையாக சுவாசிகா உருவெடுப்பார்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

nooru sami movie

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் குழு:

விஜய் ஆண்டனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், 'ஜெய் பீம்' புகழ் லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், முன்னணி இயக்குநர் பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பாடினி குமார், ஜென்சன் திவாகர், பக்ஸ் மற்றும் வினோதினி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை: பாலாஜி ஸ்ரீராம்; ஒளிப்பதிவு: எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ்; படத்தொகுப்பு: ஹரிஷ் யுவராஜ்; கலை இயக்கம்: வி. சசிகுமார்; பாடல்கள்: மோகன் ராஜன் மக்கள் தொடர்பு (PRO): நிகில் முருகன்

nooru sami movie

பாசப் போராட்டத்தையும், எதார்த்தமான கிராமத்து வாழ்வியலையும் பேசவிருக்கும்  நூறு சாமி  திரைப்படம், வரும் ஜூன் 19 முதல் தியேட்டர்களில் குடும்பக் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web