சென்னை விட்டே கிளம்பும் விஜய் ஆண்டனி - கிராமம் தான் பெஸ்ட்!

 
vijay antony

விஜய் ஆண்டனி:

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக பார்க்கப்பட்டு வரும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து பிரபலமான ஹீரோவாக இருந்து வருகிறார். கடந்த 25 ஆம் ஆண்டு வெளிவந்த சுக்கிரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அதன் பிறகு நான் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

தற்போது நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசி இயக்கத்தில் நூறு சாமி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது .

கிராமத்தை நோக்கி விஜய் ஆன்டனி: 

vijay antony

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி நான் வேலைக்காக தான் சென்னையில் இருக்கேன் ஸ்ரீதர் வேம்பு போல ஏதாவது ஒரு கிராமத்தில் சீக்கிரமே செட்டில் ஆகி விடுவேன். ஒரு குண்டு போட்டாலோ... கரண்ட் கட் ஆனாலோ சென்னையில் வாழவே முடியாது. 

கொரோனா காலத்தில் எல்லாம் ரொம்பவே நாங்க கஷ்டப்பட்டு இருந்தோம். கிராமத்தில் மனதுக்கு நிறைவான வாழ்க்கை நிச்சயமாக வாழலாம். சீக்கிரமாவே நான் கிராமத்தை நோக்கி சென்று விடுவேன் என விஜய் ஆண்டனி உறுதியாக கூறி இருக்கிறார்.

Tags

From Around the web