Categories: Cinema News latest news

கொஞ்சம் பெரிய இடம்.! அங்கேயாவது கொஞ்சம் நடிங்க பாஸ்.! கெஞ்சும் ரசிகர்கள்.!

தனக்கு உகந்த தன்னால் முடிந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடித்து வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் தியேட்டரில் நல்ல வெற்றியை பதிவு செய்தது.

தனக்கு அவ்வளவு சிறப்பாக நடிக்க தெரியாது என்று அவரே ஒத்து கொள்வார். முகத்தில் அதிகமாக பாவனைகளை அவர் காட்ட மாட்டார். அதனையே தன்னுடைய உடல் மொழியை வைத்து அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

தற்போது பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன், மாநகரம் படத்தை இந்தியில் மும்பைக்கார் எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்களேன் – கீர்த்தி சுரேஷின் முதுகில் ஒய்யாரமாய் சாய்ந்துகொண்ட சூப்பர் ஸ்டார்.! லீக்கான போட்டோ.!

இந்த படத்தை அடுத்து சந்தோஷ்சிவன் அடுத்ததாக பாலிவுட் படத்தை இயக்க உள்ளாராம். அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளராம்.

தமிழில் விஜய் ஆண்டனியின் நடிப்பு ஓகே ரகம் தன. தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், பாலிவுட் ரசிகர்கள் விஜய் ஆண்டனியின் அந்த நடிப்பை ஏற்று கொள்வார்களா? அங்கு தந்து பாணியை மாற்றி விஜய் ஆண்டனி படம் நடிக்க உள்ளாரா என்று படம் வெளியான பிறகுதான் தெரியும்.

Manikandan
Published by
Manikandan