Nooru Saami Box Office : 3 நாட்களில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nooru Saami 3 days collection

Nooru Sami Movie Box Office : 3 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'பிச்சைக்காரன்' படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் சசி, நடிகர் விஜய் ஆண்டனி காம்போவில் ரெடியாகியுள்ள புதிய படம் தான் 'நூறு சாமி'.

இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும், அஜய் திஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், பகவதி பெருமாள், சபிதா ராய், வினோதினி வைத்தியநாதன், சக்தி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.4.05 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web