Nooru Sami Box Office : 10 நாட்களில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nooru Sami 10 days collection

Nooru Saami Movie Box Office : 10 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. பொதுவாகவே அம்மா சென்டிமென்ட் படங்கள் பெண்கள் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறும்.

அவர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட 'பிச்சைக்காரன்' படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படத்தை சசி இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நடித்திருந்தார்.

மீண்டும் இவர்களது காம்போவில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான அம்மா சென்டிமென்ட் படம் தான் 'நூறு சாமி'. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் சசி இக்கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

இதில் ஹீரோயினாக ஸ்வாசிகா நடிக்க, முக்கிய ரோல்களில் கருணாஸ், அஜய் திஷன், சக்தி, பகவதி பெருமாள், காவ்யா அனில், தாமரை, முனிஷ்காந்த் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.9.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web