Nooru Sami Box Office : 2 வாரத்தில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Nooru Saami Movie Box Office : 2 வாரத்தில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் தங்கை மகன் தான் அஜய் திஷன்.
ஏற்கனவே, அஜய் திஷன் - விஜய் ஆண்டனி இணைந்து நடித்த 'மார்கன்' வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் காம்பினேஷனில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'நூறு சாமி'.
'பூ, பிச்சைக்காரன்' புகழ் இயக்குநர் சசி இயக்கியுள்ள இந்த படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸானது. அம்மா சென்டிமென்ட் படமான இதில் ஸ்வாசிகா தான் அம்மா ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார்.
இந்த படத்துக்கு தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலாஜி ஶ்ரீராம் இசையமைத்துள்ளார், ஹரிஷ் யுவராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் பாராட்டை குவித்து வரும் இப்படம் கடந்த 14 நாட்களில் உலக அளவில் ரூ.16.16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
