Nooru Saami Box Office : 4 நாட்களில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nooru Sami 4 days collection

Nooru Sami Movie Box Office : 4 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'சக்தித் திருமகன்' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ரெடியாகியுள்ள புதிய படம் 'நூறு சாமி'.

இயக்குநர் சசி இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியானது. இதில் ஹீரோயினாக ஸ்வாசிகா நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அஜய் திஷன், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.4.61 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web