Nooru Saami Box Office : 5 நாட்களில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nooru saami 5 days collection

Nooru Sami Movie Box Office : 5 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விஜய் ஆண்டனி.

நடிகர் விஜய் ஆண்டனிக்கு தமிழ் மொழி மட்டுமின்றி, தெலுங்கிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் நடித்துள்ள புதிய படமான 'நூறு சாமி' கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.

இயக்குநர் சசி இயக்கியுள்ள இப்படத்தில் 'செல்வி' என்ற ரோலில் நடித்திருக்கும் கதாநாயகி ஸ்வாசிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும், லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.5.54 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

From Around the web