Nooru Sami Box Office : 6 நாட்களில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jun 25, 2026, 08:41 IST
Nooru Saami Movie Box Office : 6 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மெகா ஹிட்டானது.
இந்த படத்தில் 'நூறு சாமிகள்' என்ற சூப்பரான அம்மா பாடல் இடம் பெற்றிருந்தது. தற்போது, 'நூறு சாமி' என்ற தலைப்பிலேயே சசி ஒரு படத்தை இயக்கி கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆன இதிலும் விஜய் ஆண்டனி தான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார்.
அம்மா சென்டிமென்ட் ஹைலைட்டாக இருக்கும் இந்த படம் டார்கெட் ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.6.02 கோடி வசூல் செய்துள்ளதாம்.
