Nooru Sami Box Office : ஒரு வாரத்தில் விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nooru Sami 7 days collection

Nooru Saami Movie Box Office : 7 நாட்களில் 'நூறு சாமி' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஒரு இசையமைப்பாளராக தன் சினிமா பயணத்தை துவங்கிய விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர்ந்து நல்ல படங்களை டிக் அடித்து நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்று தந்த படம் 'பிச்சைக்காரன்' தான். இதை 'பூ' புகழ் இயக்குநர் சசி இயக்கியிருந்தார்.

இதே விஜய் ஆன்டனி - சசி காம்பினேஷனில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸான படம் தான் 'நூறு சாமி'. இதில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா ஜோடியாக நடித்துள்ளனர்.

மேலும், அஜய் திஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், சபிதா ராய், வினோதினி வைத்தியநாதன் நடித்துள்ளனர். கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வரும் இந்த படம் கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.6.63 கோடி வசூல் செய்துள்ளதாக தண்டோரா போடப்படுகிறது.

From Around the web