'ஜீ5'-ல் விஜய் ஆண்டனி - ஸ்வாசிகாவின் 'நூறு சாமி' எப்போது ரிலீஸ்?

 
Nooru Sami Z5

விஜய் ஆண்டனி - ஸ்வாசிகா ஜோடியாக நடித்த படம் தான் 'நூறு சாமி'. இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

'பூ, பிச்சைக்காரன்' போன்ற சூப்பர் படங்களை கொடுத்த இயக்குநர் சசி தான் இதன் இயக்குநர். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தியேட்டரில் பார்த்து பாராட்டிய ரசிகர்கள் இன்னொரு முறை பார்ப்பதற்கும், இப்படி ஒரு நல்ல படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணி விட்டோமே என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு குட் நியூஸ் சொல்லப்போகிறேன்.

'நூறு சாமி' படம் பிரபல OTT தளமான 'ஜீ5'-யில் ரிலீஸ் ஆகப்போகிறது. அதுவும் வருகிற ஜூலை 31-ஆம் தேதியேவாம். இதனால் இதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

From Around the web