×

நான் சரக்கடிப்பேன்.. தம்மடிப்பேன்... விஜய் ஆண்டனி ஓப்பன் டாக்...

 
நான் சரக்கடிப்பேன்.. தம்மடிப்பேன்... விஜய் ஆண்டனி ஓப்பன் டாக்...

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நெகட்டிவ் தலைப்பு என்றாலே செண்டிமெண்டாக அதை தவிர்க்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் பிச்சைக்காரன், சைத்தான், எமன் என தலைப்பு வைத்து ஹிட் கொடுத்தவர். சினிமாவில் இவரின் திரைப்படங்கள் தொடர் வெற்றிகளை பெறவும் முன்னணி நடிகராகவும் மாறினார். விரைவில் அவர் நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

பொதுவாக நடிகர்கள் இமேஜ் காரணமாக தங்களின் சொந்த வாழ்க்கையை, பழக்கத்தை வெளியே பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், விஜய் ஆண்டனி அதற்கு விதிவிலக்கு. சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘நான் தண்ணி அடிப்பேன், தம் அடிப்பேன், நான் ஒரு சாதாரண மனிதன். அதை ஏன் நான் மறைக்க வேண்டும்?. என்னை பற்றி கிசுகிசுக்கள் ஏன் வருவதில்லை என எனக்கு தெரியவில்லை. நான் எனது செயலில் தெளிவாக இருக்கிறேன். நான் இசையமைக்கும் பாடல்களை ரசிகர்கள் போல் நான் ரசிப்பதில்லை. ஒன்று அது ஹிட் ஆகும் அல்லது தோல்வி அடையும். ஏதோ ஒன்று நடக்கும்’ என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News