மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இளம் பெண்ணுக்கு PROPOSE செய்த விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்களில் வெளியாகி இருக்கும் நூறு சாமி திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படியான சமயத்தில் விஜய் ஆண்டனி இளம் பெண் ஒருவருக்கு ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி கடந்த 2005ம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாத்திமா சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக பணியாற்றியபோது நேர்காணல் எடுப்பதற்காக சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் ஆண்டனியின் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள் .இந்த நிலையில் தற்போது தனது மனைவிக்கு எப்படி ப்ரபோஸ் செய்தேன் என்று அப்படியே இளம்பெண் ஒருவருக்கு ப்ரபோஸ் செய்து காட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
அந்த சமயத்தில் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஆரம்பித்த விஜய் ஆண்டனி......உங்களுடைய வீட்டில் உங்களுக்கு பொண்ணு பாக்க மாப்பிள்ளை லிஸ்ட் ரெடி பண்ணி வச்சிருந்தா அந்த லிஸ்ட்ல என்னோட பேரையும் சேர்த்துக்கோங்க இதுதான் இப்படித்தான் நான் என்னோட மனைவிக்கு ப்ரொபோஸ் செய்தேன் என்று விஜய் ஆண்டனி கூறியிருந்தார் .
