விஜய் ஆண்டனியின் ROMANCE எப்படி? சட்டென வெட்கப்பட்ட ஸ்வாஷிகா!

 
VIJAY ANTONY SWASHIKA


நூறு சாமி திரைப்படம்:

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நூறு சாமி என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படமாக நூறு சாமி உருவாகிறது.

மாபெரும் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சசியும் நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலமாக இணைந்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முழுக்க முழுக்க கிராமத்து மனிதனாக வாழ்ந்திருப்பதாக இயக்குனர் சசியும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் .

விஜய் ஆண்டனியின் ரொமான்ஸ்:

NURU SWAMY

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் ஹீரோயின் ஆன சுவாஷிகாவிடம் பத்திரிகையாளர்கள் விஜய் ஆண்டனியின் ரொமான்ஸ் எப்படி இருக்கு? என கேட்டதற்கு சட்டென வெட்கப்பட்டு தலை குனிந்தார் .

மேலும் பேசிய அவர் விஜய் ஆண்டனி ரொமான்ஸ் பண்றது யாருக்குமே தெரியாது. ரொம்பவும் க்யூட்டா ரொம்பவும் அமைதியா கொஞ்சமா பண்ணுவாரு. அது அவ்வளவு அழகா இருக்கும் என சுவாஷிகா தெரிவித்திருந்தார். 

Tags

From Around the web