ரஜினியின் Dharman-க்காக விஜய் ஆண்டனி செய்த நல்ல விஷயம்!

 
Dharman

கோலிவுட்டின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' ரிலீஸ் தேதி அக்டோபர் 15-ஆம் தேதி என்று ஆல்ரெடி லாக் செய்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து தலைவர் நடித்து வரும் படம் 'தர்மன்'. ரஜினியின் நண்பரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தான் இதை தயாரித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை 'டிராகன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் டாப் கியரில் நடந்து வருகிறது. தமிழ் தலைப்பையே தெலுங்கு வெர்ஷனுக்கும் வைக்க படக்குழு முயற்சி செய்திருக்கிறது.

அப்போது, இப்படத்தின் டைட்டிலை ஆல்ரெடி ஒரு தெலுங்கு படத்துக்காக அங்கு ரெஜிஸ்டர் பண்ணி வைத்திருந்தார் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. தற்போது, ரஜினி - கமல் கேட்டதும் தாராள மனசுடன் பணம் எதுவும் வாங்காமல் கொடுத்து விட்டாராம் விஜய் ஆண்டனி.

From Around the web