Categories: Cinema News latest news throwback stories

எல்லார் முன்னாடியும் கேவலமா நடிக்கிறேன்னு சொல்லு! – இயக்குனரிடம் கூறிய விஜய் ஆண்டனி..

சினிமாவில் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடித்த முதல் திரைப்படமான நான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. சினிமாவிற்கு முதன் முதலாக சவுண்ட் என்ஜினியர் பணிக்காகவே விஜய் ஆண்டனி வந்தார். நாட்கள் செல்ல செல்ல இசையை கற்றுக்கொண்ட விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைக்க துவங்கினார்.

vijay antony

இதையும் படிங்க:சுருளிராஜன் சத்யராஜுக்கு சொன்ன அட்வைஸ்!.. இத நமக்கு யாராவது பண்ணிருந்தா நம்ம எப்பவோ முன்னேறி இருப்போம்!..

அவர் இசையமைத்த இரண்டாவது திரைப்படமான டிஸ்யும் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. அதனையடுத்து இசை துறையில் வரவேற்பை பெற்றார் விஜய் ஆண்டனி. ஆனால் இசை துறையை விடவும் நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் அடுத்து நடிக்க துவங்கினார்.

அட்வைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி:

சினிமாவில் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது சசி இயக்கி வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து இந்த வருடம் அவர் நடித்து பிச்சைக்காரன் 2 வெளியானது. நடிப்பை பொறுத்தவரை ஆவரெஜ் நடிப்பைதான் விஜய் ஆண்டனி வெளியிட்டு வருகிறார்.

Vijay Antony

இதையும் படிங்க:விஜய்-க்கு கெட்ட நேரம் வந்துவிட்டது!.. அரசியலுக்கு வந்தால் இது தான் நிலைமை!..

இதுக்குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும்போது மிகவும் மாடரேட்டாகதான் நடிக்கிறேன் என்பது எனக்கே தெரியும். எனவேதான் எந்த இயக்குனர் என்னை வைத்து படம் இயக்கினாலும் அவர்களிடம் ”கேவலமாக நடிக்கிறேன் என்றால் கேவலமாக நடிக்கிறேன் என கூறிவிடுங்கள். காதுக்குள் வந்து மறைமுகமாக எல்லாம் கூற வேண்டாம். மைக்கிலேயே கூறுங்கள்” என கூறிவிடுவேன், இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க:எம்.ஜி.ஆர் செய்த அந்த காரியம்..!பதறி ஓடி வந்த தயாரிப்பாளர்..!என்ன நடந்தது தெரியுமா..?

 

 

Published by
Rajkumar