என் மாமாவுக்கு... மனைவி செயலால் மகிழ்ந்த விஜய் ஆண்டனி!

 
vijay antony

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்கத் துவங்கி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

குறிப்பாக பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாஷிகா இருவரது நடிப்பில் ன் நூறு சாமி திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

vijay antonny

இந்த திரைப்படம் வருகிற 19ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணியில் விஜய் ஆண்டனி படு பிசியாக ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு மேடையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.

அப்பொழுது அவரது காதல் மனைவியான பாத்திமா என்னுடைய மாமாவுக்கு நான் எப்போதும் இந்த பாடலை டெடிகேட் செய்வேன். அது "உன்னைவிட உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல" என்ற பாடல் தான் என கூற விஜய் ஆண்டனி மனைவியின் காதலில் மெய்மறந்துப்போனார்.

Tags

From Around the web