கடலில் ஏற்பட்ட கோர விபத்து... செத்து பிழைச்ச விஜய் ஆண்டனி!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு ஹீரோவாக அவதாரம் எடுத்து தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. இவரது பிச்சைக்காரன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் நூறு சாமி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக கிராமப் பாங்கான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி அசத்தியுள்ளார்.

கணவனை இழந்து சமூகத்தில் தனிமையில் வாழும் பெண்களுக்கு இந்த திரைப்படம் ஒரு வலிமையும் ஆற்றலையும் தருகிறது என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் பல மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் ஏற்பட்ட ஒரு கோரமான விபத்து குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது நான் ஒரு காட்சியின் போது கடலில் குதித்து கப்பலில் மோதி விட்டேன். சுயநினைவே இல்லாமல் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். கை கால் மட்டும் அசைத்திருந்தால் நான் அப்படியே உள்ளே போயிருப்பேன். மிதந்து கொண்டிருந்ததால் உயிர் தப்பித்தேன் .
அந்த நிமிடம் போன உயிர் எனக்கு திரும்ப வந்தது என விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இவ்வளவு சிரமங்கள் இருக்கிறதா? உயிரை பணையை வைத்து இப்படி நடிக்கிறார்களா? என ரசிகர்கள் வேதனை அடைந்து விட்டனர்.
