அப்பா குட்டி ஓடிடி உரிமத்தை வாங்கிய அமேசான் பிரைம்!..
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசம், அன்பு, தியாகம் ஆகியவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பக்ஸ், ஹரிப்பிரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்,படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அப்பாவ போல என்ற புரோமோ பாடல் 20 லட்சம் வியூஸ்களை கடந்து ரசிகர்களைடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை மீனாட்சி இளையராஜா பாடியுள்ளார்.
அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் ப்ரைம் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 6ம் தேதி தீபாவளி வெளியீடாக சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா படங்களுடன் வெளியாகிறது.
