×

விஜய் ஆண்டனியின் "பிச்சைக்காரன் 2" பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

அதேபோல், தன்னுடைய படத்திற்கான தலைப்பையும் வித்தியாசமாகவே தேர்வு செய்து ஹிட் கொடுப்பவர். அந்தவகையில் கடந்த 2016 ஆண்டில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான "பிச்சைக்காரன்" தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்தை சசி இயக்கவில்லை மாறாக  தேசிய விருது பெற்ற ’பாரம்’ திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார்.  

இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த புதிய போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று பதின் மீதான எதிர்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News