தெறி படத்தை ரீ-ரிலீஸ் பண்ணாதீங்க!.. கலைப்புலி தாணுவிடம் விஜயே சொன்னாரா?…

 
தெறி படத்தை ரீ-ரிலீஸ் பண்ணாதீங்க!.. கலைப்புலி தாணுவிடம் விஜயே சொன்னாரா?…

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 2016ம் வருடம் வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திட்டமிட்டர்.

பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வராத நிலையில் கடந்த 15 அல்லது 16ம் தேதி திரைப்படத்தை ரீரிலீச் செய்ய ஒரு திட்டமிட்டார். ஆனால் பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் போன்ற திரைப்படங்கள் வந்ததால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே கடந்த 23ம் தேதி தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கினார்.

ஆனால் திரௌபதி 2 போன்ற சின்ன படங்கள் அந்த தேதியில் வெளியானதால் அவர்கள் கோரிக்கை வைத்ததால் தாணு தனது முடிவை மாற்றினார். இப்போதுவரை தெறி எப்போது ரீ-ரிலீஸ் என்கிற தேதியை தாணு அறிவிக்கவில்லை. இந்நிலையில் தெறி படம் இப்போதைக்கு ரீ-ரிலீஸாக வாய்ப்பில்லை என சொல்கிறார்கள்.

விஜய் தரப்பிலிருந்து கலைப்புலி தாணுவை தொடர்பு கொண்டு ‘இப்போது நீங்கள் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் ஜனநாயகன் படம் வராது என்பது போன்ற இமேஜ் ஏற்படும்.. ரசிகர்களும் அப்படி நம்புவார்கள்.. எனவே இப்போதைக்கு நீங்கள் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் கலைப்புலி தாணு முடிவை கைவிட்டதாக தெரிகிறது. அநேகமாக ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகி சில மாதங்கள் கழித்து தெறி படம் ரிலீஸாகலாம் என கணிக்கப்படுகிறது.

From Around the web