தேமுதிக வீட்டுத் திருமணத்திலும் விஜய் தான் ஹீரோ!.. எவ்ளோ குட்டிஸ் ரசிகர்கள் பாருங்க!..
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டதை தொடர்ந்து தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
முதலில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற அனிருத் காவ்யா மாறன் திருமண வரவேற்பில் விஜய் கலந்துகொண்டார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரையும் சந்தித்தத புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
Blessing your day ❤️❤️ https://t.co/ThYdzHzURH
— Actor Vijay Team (@ActorVijayTeam) November 21, 2026
மறைந்த நடிகரும் தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் தேமுதிகவின் பொருளாளராவார். இவர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பல அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு வருகின்றனர். அந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் விஜய்யிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கிய இரண்டு பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் ஒரே நாளில் விஜய் பங்கேற்றிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
