பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கணக்கா வந்த முதலமைச்சர் விஜய்!.. அடேங்கப்பா இதுதான் காரணமா?..
முதலமைச்சர் விஜய் இன்று காலை தயாரிப்பாளர் ஜகதீஷ் வீட்டில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டு வேட்டி மற்றும் சட்டையில் மாப்பிள்ளை தோற்றத்தில் விஜய் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகர் விஜயின் மேனேஜராகவும் அறியப்படும் ஜகதீஷ், விஜய் சேதுபதியின் மகாராஜா மற்றும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும், ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள அவர், நீண்ட காலமாக விஜயின் மேனேஜராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திலும் ஜகதீஷ் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனால், விஜய் மற்றும் ஜகதீஷ் இடையேயான நட்பு மற்றும் தொழில்துறை தொடர்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் ஜகதீஷ் வீட்டில் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் விஜய் சிரித்தபடி சென்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
குறிப்பாக அரசியல் பயணத்திற்குப் பிறகு விஜய் பொதுநிகழ்ச்சிகளில் குறைவாகவே தோன்றிவரும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “எளிமையே விஜயின் அடையாளம்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாப்பிள்ளை கணக்கா இருக்கேன்னா என்றும் ஹேர்ஸ்டைல் மற்றும் க்ளீன் ஷேவ் செய்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்கின்றனர்.
மேலும், ஜனநாயகன் படத்தின் அப்டேட்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களும், இந்த நிகழ்ச்சியில் விஜயின் புதிய லுக்கை வைரலாக்கி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
