சிஎம் ஆகுறது அப்புறம்.. நண்பன் ஜீவாவுக்காக ஓடோடி வந்த விஜய்.. ஆர்.பி. சவுத்ரிக்கு அஞ்சலி
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நாளை காலை 11.30 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய் ஓடோடி வந்த காட்சிகள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய்க்கு முதல் முறையாக வெற்றிப் படமாக மாறிய பூவே உனக்காக படத்தை தயாரித்தவரே ஆர்.பி. சவுத்ரி தான். விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், ஜில்லா உள்ளிட்ட பல படங்களையும் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.
மேலும், விஜய்யின் நண்பன் படத்தில் ஜீவா நடித்துள்ள நிலையில், ஜில்லா படத்திலும் ஓபனிங் பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடினார்.
விஜய் மற்றும் ஜீவா இருவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆர்.பி. சவுத்ரியை தனது சொந்த அப்பா போலவே மதித்து பழகி வந்த விஜய் அவரது மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது அஞ்சலி செலுத்தினார்.
