விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே வெளியான அரபிக் குத்து பாடல் தற்போது வரை இணையத்தில் ட்ரெண்டில் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து பீஸ்ட் இரண்டாவது பாடலான ஜாலியா ஜூம்கானா எனும் பாடல் நாளை வெளியாக உள்ளது. அந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி அதுவும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று பீஸ்ட் படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் விஜய், ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் உதட்டை பிடித்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன் – போட்றா வெடிய.! இதுதான் ஆதாரம்.! இனிதான் கச்சேரி ஆரம்பம்.! AK62 தாறுமாறு அப்டேட் இதோ…
விஜய் இந்த மாதிரி ஒரு ஸ்டில் கொடுத்து வருடங்கள் ஆகிவிட்டது. சமீபகால படங்களில் இந்த மாதிரியான ஸ்டில் அவர் கொடுத்தது இல்லை. இதற்கு முன்னர் போக்கிரி படத்தில் அசினுக்கு உதட்டை பிடித்து விசில் அடிக்க கற்றுத்தருவது போல ஸ்டில் வெளியாகி இருக்கும். அதற்கடுத்து வில்லு படத்தில் நயன்தாராவை ஒரு காட்சியில் உதட்டை பிடித்து பேசுவது போல இருக்கும்.
இறுதியாக வேட்டைக்காரன் படத்தில் அனுஷ்கா உதட்டை பிடித்து விஜய் பேசுவது போல இருக்கும். இதனை அடுத்து ஹீரோயின் உதட்டை பிடிக்கும் அளவுக்கு நெருக்கமாக விஜய் நடித்து சமீபகாலத்தில் நாங்கள் பார்த்தது இல்லை.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…