Categories: Cinema News latest news

பீஸ்ட் மொத்த கதையும் அப்படியே வெளியிட்ட படக்குழு.! நாங்க தான் அப்போவே சொல்லிட்டோமே.!?

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது பீஸ்ட் தான். தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக சில நாடுகளில் 12ஆம் தேதி வெளியாகும்.

ஏற்கனவே பீஸ்ட் பட ஷூட்டிங்கில் இருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே அவ்வப்போது லீக் ஆகி வந்தன. அதனை லீக் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வந்தனர். சிலர் பீஸ்ட் கதை இதுதான் என ஒரு கதையை கூட கூறிவந்தனர்.

 

தற்போது அந்த கதை தான் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதில் விஜய் முன்னாள் ராணுவ வீரராக நடித்துள்ளார். ஒரு ஷாப்பிங் மாலை தீவிரவாத கும்பல் கடத்திவிடுகிறது. அந்த மாலில் தான் விஜய் இருக்கிறார். அவர் அங்குள்ள சில நபர்களை கொண்டு எப்படி புத்திசாலித்தனமாக கையாண்டு, தீவிரவாத கும்பல் சதியை முறியடிக்கிறார் என்பது என கூறினார்கள்.

இதையும் படியுங்களேன் – தங்கள் லீலை போட்டோக்களை இணையத்தில் லீக் செய்து வரும் அண்ணன் தம்பி.!

வெளிநாடுகளில் ஒரு படம் வெளியாக உள்ளது என்றால், அது அந்த நாட்டு மக்களுக்கு புரியும் வண்ணம் சிறு குறிப்பாக அந்த கதை சுருக்கத்தை படத்தின் இணைய விளம்பரத்தில் தெரியப்படுத்துவார்கள். அந்த கதை சுருக்க புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan